அரசு பள்ளியில் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியையின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கி தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதி மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி தற்காலிக தமிழ் ஆசிரியை பள்ளி வளாகத்திலேயே வைத்து கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து படுகொலை செய்யப்பட்ட ஆசிரியையின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கி தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், விசாரணை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, குற்றவாளிக்கு விரைவில் தண்டனை பெற்றுத்தரப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஆசிரியை ரமணியின் உயிரிழப்பு கல்வித்துறை, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஈடு செய்ய முடியாத பெரிய இழப்பு என கூறியுள்ளார்.