அர்ஜென்டினா நாட்டில் தடம் புரண்ட ரயிலின் மீது மற்றொரு பயணிகள் ரயில் மோதி அடுத்தடுத்து தொடர் விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் புவனேஷ் ஐரேஸில் இன்று ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த ரயிலின் மீது அந்த வழியே வந்த பயணிகள் ரயில் மோதி மற்றொரு விபத்தும் ஏற்பட்டது என கூறப்படுகிறது.
அடுத்தடுத்து நடந்த இந்த விபத்தில் சிக்கி 30 பேர் வரை படுகாயம் அடைந்து உள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் நிகழ்விற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பசம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்பத்தி உள்ளது.
⚠️ #EnEsteMomento Se descarriló un tren de pasajeros de la línea San Martín a la altura de #Palermo:
hay 16 pasajeros heridos.
Había impactado contra una formación que estaba detenida en las vías. pic.twitter.com/dWKHKA2xBP— ES RE VIRAL (@esreviral) May 10, 2024