#Breaking: தென்மாவட்டங்களை புரட்டியெடுக்கும் அதிக கனமழை: வெள்ளத்தின் பிடியில் வீதிகள்.!! நீச்சலடிக்கும் இளசுகள்.!!

தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று அதிக கன மழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் வகையில் இலங்கை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகின்றது.

இதனால் அங்கு மழை அதிக அளவில் கொட்டி தீர்த்து வருகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம், திருநெல்வேலி ராதாபுரம், தென்காசி ஆகிய மாநிலங்களில் கனமழையால் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவியில் நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வீதிகளில் நீர் ஓடுவதால் பலரும் நீச்சல் அடித்து வரும் வீடியோ வெளியாகி உள்ளது.

https://www.facebook.com/watch/?v=1057414385405859&t=24

Read Previous

கோர விபத்து..!! லாரியினுள் சொருகி நின்ற ஆம்னி பேருந்து.. சம்பவ இடத்திலேயே பலியான 2 டிரைவர்கள்..!! பரபரப்பு சம்பவம்.!!

Read Next

நீட் தேர்வு விவகாரம்..!! மேலும் ஒரு மாணவி தற்கொலை..!! ராசிபுரம் அருகே பரபரப்பு.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular