கடந்த சில நாட்களாகவே தென் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கோடை மழையின் காரணமாக மக்கள் அக்னி வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியான சூழலை அனுபவித்துக் கொண்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து பல மாவட்டங்களில் கன மழைக்கான எச்சரிக்கையினை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்நிலையில் வைகை ஆற்றில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி நீர் திறக்கப்படும் என்ற காரணத்தால் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்ட வைகை ஆற்றைக் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள பாசன கண்மாய்களில் நீர் பெருக்க வைகை அணையில் இருந்து நீர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டு உள்ளது. தொடர்ந்து வருகின்ற 4 நாட்களுக்கு வினாடிக்கு 1500 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது.