#Breaking : மருத்துவமனையில் இருந்த விஜயகாந்த்..!! ஒரு வழியாக வீடு திரும்பினார்..!!

தேமுதிக கட்சியின் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணத்தினால் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான மியாட் மருத்துவமனையில் அனுமதி பெற்று இருந்தார்.

அவருக்கு இன்று வரையில் தீவிரசிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. மேலும் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு காவல் துறை பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.

சில தினங்களுக்கு முன்பு விஜயகாந்த் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார் என்று ஒரு செய்தி பரவியது. ஆனால் அது உண்மை அல்ல என்று மருத்துவ நிர்வாகம் குறிப்பிட்டு உள்ளது. அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை கவலை அடைய வைத்த நிலையில் தற்போது நீண்ட நாட்கள் சிகிச்சைக்கு பின் கேப்டன் விஜயகாந்த் உடல் நலம் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில்  நிம்மதி ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

ஒரே ட்விட்டில் மாறிய நிலைமை..!! சமூக வலைதளத்தில் நடிகர் விஜயின் செல்வாக்கு குறைந்ததா.!!

Read Next

கஞ்சா செடியை மருந்துகள் தயாரிக்க பயன்படுத்த அனுமதி..!! ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular