
BREAKING: வயநாடு நிலச்சரிவு..!! பலி எண்ணிக்கை 344 ஆக உயர்வு..!!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் இன்று (ஆகஸ்ட் 03) சனிக்கிழமை 5வது நாளாக தொடர்கிறது. சுமார் 200 பேரை இன்னும் காணவில்லை. நேற்று 210 உடல்கள், 134 உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 96 ஆண்கள், 85 பெண்கள் மற்றும் 29 குழந்தைகள் அடங்குவர். உறவினர்களால் அடையாளம் காணப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 146 ஆக இருந்தது. வயநாடு, கோழிக்கோடு மாவட்ட மருத்துவமனைகளில் 84 பேர் சிகிச்சையில் உள்ளனர்.