
வரும் பதினொன்றாம் தேதி தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வரும் பத்தாம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடை மின்னுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. அதோடு வரும் 11ஆம் தேதி கன்னியாகுமரி நெல்லை தென்காசி, தூத்துக்குடி விருதுநகர் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.