
எல்லைப் பாதுகாப்புப் படை தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Aircraft Mechanic, Senior Radio Mechanic, Assistant Radio Mechanic, Senior Flight Gunner, Junior Flight Gunner, Junior Flight Engineer, Inspector/ Storeman & Sub Inspector Storeman பணிகளுக்கான 40 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இறுதி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
காலிபணியிடங்கள்:
- Senior Aircraft Mechanic (Ins.) – 10 பணியிடங்கள்
- Senior Radio Mechanic (Ins.) – 06 பணியிடங்கள்
- Assistant Radio Mechanic (Asst. Sub Ins.) – 01 பணியிடம்
- Senior Flight Gunner(Ins.) – 05 பணியிடங்கள்
- Junior Flight Gunner(Sub Ins.) – 04 பணியிடங்கள்
- Junior Flight Engineer ( Sub Ins.) – 07 பணியிடங்கள்
- Inspector/ Storeman – 03 பணியிடங்கள்
- Sub Inspector Storeman – 04 பணியிடங்கள்
கல்வி தகுதி:
பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொடர்புடைய வர்த்தகத்தில் மூன்றாண்டு டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதானது 52 என நிர்ணயிக்கபட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாத ஊதியம் பே மேட்ரிக்ஸ் 5 முதல் 7 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
- Written Examination)
- Physical Standards Test, Physical Efficiency Test, Documentation, Practical/Trade Test & Medical Examination and Re-Medical Examination
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.