இரவு நேரத்தில் மீதமான இட்லியை காலையில் சுவையான சில்லி இட்லி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக இட்லி மீதமானால் உடனே அதனை உதிர்த்து உப்புமா செய்வதை தான் நாம் அவதானித்திருப்போம். ஆனால் சற்று வித்தியாசமான முறையில் சில்லி இட்லி செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
மீந்து போன இட்லி – 6
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1/2 கப்
குடைமிளகாய் – 1/2 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 5
தக்காளி – 1 கப்
உப்பு – சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
பாவ் பாஜி மசாலா – 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
இட்லியை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து பின்பு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், குடைமிளகாய் இவற்றினை சேர்த்து வதக்கவும்.
தொடர்ந்து சிறிது உப்பு பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 30 நொடிகள் வதக்கிவிட்டு, இதில் தக்காளியை சேர்த்து நன்கு மசியும் அளவிற்கு வதக்கவும்.
பின்பு அதில் 2 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பாவ் பாஜி மசாலா சேர்த்து கிளறி, 1 நிமிடம் வதக்கவும்.
தொடர்ந்து இட்லி துண்டுகளை சேர்த்து, மசாலாக்கள் இட்லியுடன் நன்கு ஒன்று சேரும் வரை கிளறி இறக்கி மேலே எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லியை தூவினால், சுவையான மசாலா இட்லி ரெடி…