சமையல் – Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் – Tamilyugam https://tamilyugam.in Wed, 10 Jun 2026 06:32:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://tamilyugam.in/wp-content/uploads/2022/09/cropped-site-icon-tamilyugam-news-32x32.png சமையல் – Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் – Tamilyugam https://tamilyugam.in 32 32 உடலை இரும்பாக்கும் எள்ளுப் பொடி சாதம்..!! – ஆரோக்கியமான எள்ளுப் பொடி சாதம் செய்யும் ரகசியம்..!! https://tamilyugam.in/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%88-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81/ https://tamilyugam.in/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%88-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81/#respond Wed, 10 Jun 2026 06:32:11 +0000 https://tamilyugam.in/?p=238565

 

முதலில் எள்ளை நன்றாகத் தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு கப் அரிசியை நன்கு அலசி, சிறிதளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து உதிரி உதிரியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர், கடாயை அடுப்பில் வைத்து உளுந்தம் பருப்பைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

அதே கடாயில் கடலைப்பருப்பு மற்றும் வரமிளகாயைச் சேர்த்துச் சிவக்கும்படி வறுத்துத் தனியாக ஆற வைக்கவும். தொடர்ந்து, கழுவி வைத்துள்ள எள்ளை மிதமான தீயில் அது நன்றாக வெடிக்கும் வரை வறுத்து ஆற வைக்க வேண்டும்.

கடைசியாகக் கறிவேப்பிலையை வறுத்து, ஆறிய பின் மிக்ஸி ஜாரில் வறுத்த பருப்புகள், எள், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துப் பக்குவமாக அரைத்து எடுத்தால், மணமணக்கும் எள்ளுப் பொடி தயார்!

அடுத்ததாக, வேர்க்கடலையை வறுத்துத் தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, தோல் நீக்கிய வேர்க்கடலை மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்துச் சுவையாகத் தாளிக்க வேண்டும்.

இதில் நாம் அரைத்து வைத்துள்ள எள்ளுப் பொடியைத் தேவையான அளவு சேர்த்து இரண்டு நிமிடம் மிதமான தீயில் கிளறி விட வேண்டும்.

இறுதிப் பக்குவமாக, நாம் ஏற்கனவே வேக வைத்துள்ள உதிரியான சாதத்தை இதனுள் சேர்த்து, பொடி எல்லா இடங்களிலும் ஒட்டும்படி நன்றாகக் கிளறி இறக்கினால், உடம்பை இரும்பு போல மாற்றும் அற்புதம் நிறைந்த எள்ளுப் பொடி சாதம் சுடச்சுடத் தயார்..!

 

]]>
https://tamilyugam.in/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%88-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81/feed/ 0
மிளகாய் கெட்டி சட்டினி செய்வது எப்படி..?? https://tamilyugam.in/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%9a/ https://tamilyugam.in/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%9a/#respond Tue, 09 Jun 2026 06:59:19 +0000 https://tamilyugam.in/?p=238518  

தேங்காய் – 1/2 மூடி
வத்தல் மிளகாய் – 4- 5(காரத்திற்கு ஏற்ப சேர்த்து கொள்ளவும் )
புளி – நெல்லிக்காய் அளவு
சின்ன வெங்காயம் – 4
உப்பு -தேவையான அளவு
செய்முறை :
முதலில் வத்தல் மிளகாயை குறைந்த தீயல் சுட்டு எடுக்கவும் . தேங்காயுடன் சுட்ட வத்தல், புளி, உப்பு, மட்டும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு அரைக்கவும், சட்டினி பருவத்திற்கு வந்த உடன் அதை ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்துவிட்டு, விருப்பபட்டால் இதன் மேல் கடுகு, கறி வேப்பிலை தாளித்து ஊற்றவும்.

நேரம் :
10-15 நிமிடம்

குறிப்பு :

இந்த மிளகாய் கெட்டி சட்டினி, இட்லி, தோசை, ரசம் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றது

 

]]>
https://tamilyugam.in/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%9a/feed/ 0
வெறும் 10 நிமிடத்தில் அசத்தல் சுவையில் காலை உணவு செய்யணுமா..?? 2 கப் ரவை போதும்..!! https://tamilyugam.in/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-10-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d/ https://tamilyugam.in/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-10-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d/#respond Tue, 09 Jun 2026 05:57:20 +0000 https://tamilyugam.in/?p=238494 பொதுவாகவே காலை நேரத்தில் அலுவலக வேலைக்கு செல்லும் கணவன், பாடசாலைக்கு செல்லும் குழந்தைகள் என வீடே போர்களமாகத்தான் இருக்கும்.

குறிப்பாக இவர்களுக்கு மத்தியில், மனைவியும் வேலைக்கு செல்பவராக இருந்தால் சொல்லவும் வேண்டுமா? இவ்வாறான நேரங்களில் காலை உணவு தயாரிப்பது மிகவும் சவாவான விடயம் தான்.

 

 

 

இதற்கு மத்தியிலும் குழந்தைகளுக்கும் தங்களுக்கும் ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த காலை உணவை வெறும் பத்து நிமிடத்தில் செய்யலாம் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

ஆம் வெறும் 2 கப் ரவையை வைத்து சற்று வித்தியாசமான முறையில் ரவா புட்டு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

 

 

தேவையான பொருட்கள்

  • வறுத்த ரவை – 2 கப்
  • கொதிக்க வைத்த பால் – ¾ கப்
  • உப்பு – 1 தேக்கரண்டி
  • துருவிய தேங்காய் – 1 கப்
  • நெய் – 2 தேக்கரண்டி
  • சர்க்கரை – 4 தேக்கரண்டி

தயாரிக்கும் முறை

 

 

 

  • முதலில் ஒரு பாத்திரத்தில் வறுத்த ரவையைச் சேர்த்து அதில், கொதித்து ஆறிய பாலை ஊற்றி, உப்பு சேர்த்து, ரவை ஈரப்பதமாகும் வகையில் லேசாக பிசரிவிட்டு, ரவை பாலை முழுமையாக உறிஞ்சும் வகையில் 5 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும்.
  • அதனையடுத்து இந்த கலவையை ஒரு இட்லி தட்டு/ஸ்டீமர் தட்டிற்கு மாற்றி 5 நிமிடங்கள் வேகவைத்து ஒரு பாத்திரத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
  • பின்னர் அதனுமடன் துருவிய தேங்காய், சர்க்கரை மற்றும் 1 தேக்கரண்டி நெய் சேர்த்த கலந்துவிட்டு பரிமாறினால் அட்டகாசமாக சுவையில் ரவா புட்டு தயார்.
]]>
https://tamilyugam.in/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-10-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d/feed/ 0
மட்டன் குருமா ஒருமுறை இப்படி செய்து பாருங்க.. சுவை அட்டகாசமா இருக்கும்..!! https://tamilyugam.in/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%87%e0%ae%aa/ https://tamilyugam.in/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%87%e0%ae%aa/#respond Tue, 09 Jun 2026 05:41:51 +0000 https://tamilyugam.in/?p=238484 சுவையான மட்டன் குருமா எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.

மட்டன் குருமா

பொதுவாகவே பெரும்பாலான மக்கள் சைவ உணவை விட அசைவ உணவை தான் அதிகமாக விரும்புகின்றனர்.

அதிலும் ஞாயிற்று கிழமை என்றால் அனைத்து வீடுகளிலும் அசைவம் கட்டாயம் இருக்கின்றது. அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் உணவு தான் மட்டன்.

மட்டனை குழம்பாக வைத்து சாப்பிடும் நாம் அதனை சற்று வித்தியாசமான முறையில் குருமாவாக செய்து சாப்பிடலாம். இவை இட்லி தோசைக்கு அசத்தல் சுவையுடன் காணப்படும்.

 

தேவையான பொருட்கள்

 

 

ஊற வைப்பதற்கு

மட்டன் – 1 கிலோ
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்

 

மசாலா அரைப்பதற்கு

 

 

பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
கசகசா – 2 டீஸ்பூன்
முந்திரி – 6
தண்ணீர் – சிறிது
தேங்காய் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)

 

தாளிப்பதற்கு

பிரியாணி இலை – 1
நல்லெண்ணெய் – 50 மில்லி
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 4
ஏலக்காய் – 2
அன்னாசிப்பூ – 1
மராட்டி மொக்கு – 1
கல்பாசி – சிறிய துண்டு
ஜாவித்ரி – சிறிய துண்டு
பெரிய வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 5 (கீறியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
தக்காளி – 3 (பொடியாக நறுக்கியது)
ஊற வைத்த மட்டன்
உப்பு – சுவைக்கேற்ப
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
சுடுநீர் – 1 1/2 கப்
அரைத்த மசாலா

 

செய்முறை:

 

 

முதலில் மட்டனை நன்கு கழுவி அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு ஊற வைக்க வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலை, சோம்பு, கசகசா, சேர்த்து அதை நன்கு ஊற வைத்து அதனை, மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்

குக்கரில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, மராட்டி மொக்கு, கல்பாசி, ஜாதிபத்திரி இவற்றினை சேர்து வறுக்கவும்.

 

 

இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தொடர்ந்து இஞ்சி பூண்டு விழுது, தக்காளி இவற்றினை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்பு ஊற வைத்த மட்டனையும் சேர்த்து நன்றாக கிளறிவிடவும். மல்லி தூள் மற்றும் கறிவேப்பிலை தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி வைத்து 4 விசில் போட்டு இறக்கவும்.

இதில் நாம் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து பச்சை வாசனை இல்லாமல் நன்றாக கொதிக்கவிட்ட இறக்கினால் சுவையான மட்டகன் குருமா தயார்.

 

]]>
https://tamilyugam.in/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%87%e0%ae%aa/feed/ 0
நெத்திலி கருவாடு தொக்கு இதை போட்டு செய்து பாருங்க..!! சுவை அட்டகாசம்..!! https://tamilyugam.in/%e0%ae%a8%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/ https://tamilyugam.in/%e0%ae%a8%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/#respond Sat, 06 Jun 2026 05:24:28 +0000 https://tamilyugam.in/?p=238332  

நெத்திலி கருவாடு என்பது புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சத்தான உலர் மீன் வகை. இதை கொண்டு செய்யப்படும் காரசாரமான தொக்கு சாதம், இட்லி, தோசைக்கு செம்மையாக இருக்கும்.

வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய சுவையான நெத்திலி கருவாடு தொக்கு எப்படி செய்வது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
நெத்திலி கருவாடு
புளி
பெரிய வெங்காயம்
தக்காளி
வெள்ளைப் பூண்டு
எண்ணெய்
கடுகு
வெந்தயம்
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
கரம் மசாலா
உப்பு
கறிவேப்பிலை
செய்முறை

முதலில் கருவாட்டில் இருக்கும் உப்பை குறைக்க சுடுநீரில் 5–10 நிமிடம் ஊறவைத்து நன்றாக கழுவி எடுக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும். பின்னர் வெந்தயம் மற்றும் இடித்த பூண்டை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

அதன்பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். தக்காளி சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பிறகு புளிக்கரைசல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மேலும் கொதிக்க விடவும்.

இறுதியாக ஊறவைத்த நெத்திலி கருவாட்டை சேர்த்து 10–15 நிமிடம் மிதமான தீயில் வேகவிட்டால் சுவையான நெத்திலி கருவாடு தொக்கு ரெடி!

சூடான சாதத்துடன் சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.

 

]]>
https://tamilyugam.in/%e0%ae%a8%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/feed/ 0
பிரட் அல்வா ஒரு முறை இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க..!! https://tamilyugam.in/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/ https://tamilyugam.in/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/#respond Sat, 30 May 2026 09:20:41 +0000 https://tamilyugam.in/?p=238242  

* 4 பிரெட் துண்டுகளை நறுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதனுடன் 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து பிரெட் துண்டுகளைப் பொரித்தெடுக்கவும்.

* மீண்டும் ஒரு வாணலியில் முக்கால் கப் சர்க்கரை, கால் கப் தண்ணீர் சேர்த்து சர்க்கரை நன்கு கரைந்த பிறகு பொரித்த பிரெட் துண்டுகளைச் சேர்த்துக் கிளறவும். அதன் பிறகு கால் கப் பால் சேர்த்துக் கிளறவும்.

* 3 டேபிள்ஸ்பூன் இனிப்பில்லாத கோவா உடன் 2 டேபிள்ஸ்பூன் சூடான பால் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பிரெட் துண்டுகளுடன் இந்த கோவாவைச் சேர்த்து நன்கு அல்வா பதம் வரும் வரை கிளறவும்.

* ஒரு தாளிப்புக் கரண்டியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து சிறிதளவு பாதாம், முந்திரி, உலர்ந்த திராட்சை சேர்த்து வறுக்கவும்.

* தாளித்த கலவையை அல்வா உடன் சேர்த்து, கால் டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறினால், பிரெட் அல்வா ரெடி!

 

]]>
https://tamilyugam.in/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/feed/ 0
பன்னீர் பட்டர் மசாலா எப்படி செய்வது..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!! https://tamilyugam.in/%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d/ https://tamilyugam.in/%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d/#respond Sat, 30 May 2026 09:18:21 +0000 https://tamilyugam.in/?p=238230  

பன்னீர் பட்டர் மசாலா எப்படி செய்வது…..?

தேவையான பொருட்கள்:

பன்னீர் – 200 கிராம்
பச்சை பட்டாணி – அரை கப்
பட்டர் – 100 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி – ஒன்று
பால் – ஒரு கப்
இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
மல்லித் தூள் – ஒரு ஸ்பூன்
கரம் மசாலா – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
தக்காளி சாஸ் (அ) கெட்ச்அப் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:

முதலில் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். பின்னர் பன்னீரை தேவையான அளவில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நன்கு அரைக்கவும். பிறகு சிறு பாத்திரத்தில் தக்காளி, பால், தனியாத் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், தக்காளி சாஸ் ஆகியவற்றை கலந்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் வெண்ணெய் போட்டு உருக்கி, அதில் வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது ஆகியவற்றைப் போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பின்னர் கலந்து வைத்த கலவையை அதில் ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்தவுடன் அதில் பன்னீரை போட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

பின்னர் வேக வைத்த பட்டாணி மற்றும் கறிவேப்பிலையை பொடியாய் நறுக்கி அதனுடன் சேர்த்து கிளறவும். இப்போது சுவையான பன்னீர் பட்டர் மசாலா தயார்.

 

]]>
https://tamilyugam.in/%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d/feed/ 0
கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா எப்படி செய்யணும்னு தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!! https://tamilyugam.in/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b7%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/ https://tamilyugam.in/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b7%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/#respond Sat, 30 May 2026 09:16:24 +0000 https://tamilyugam.in/?p=238222 கடப்பா செய்வது எப்படி….

செய்முறை

உருளைக்கிழங்கை கழுவி சுத்தம் செய்து, தோலுரித்து சிறிய சிறிய துண்டாக வெட்டிக்கொள்ளவும். துருவிய தேங்காய், பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, பூண்டு மற்றும் கசகசாவை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை மஞ்சள்த்தூள், பட்டாணி, பீன்ஸ், உருளைக்கிழங்குடன் சேர்த்து தேவையான அளவு நீர் சேர்த்து வேகவைக்க வேண்டும்.

வாணலியில் எண்ணை ஊற்றி, காய்ந்தவுடன் கடுகு, பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்கவும். பின் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அரைத்த விழுது, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின் அதனுடன் வேகவைத்த பாசிப்பருப்பு மற்றும் காய்கறிகளை சேர்த்து சிறிதளவு நீர் விட்டு கிளரி ஒரு கொதி விடவும். சாம்பார் பதம் வந்ததும் இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி தழை தூவி கலந்து விடவும். சூடான சுவையான கடப்பா தயார்.

 

]]>
https://tamilyugam.in/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b7%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/feed/ 0
அசோகா அல்வா செய்வது எப்படி..?? https://tamilyugam.in/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be/ https://tamilyugam.in/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be/#respond Sat, 30 May 2026 09:01:18 +0000 https://tamilyugam.in/?p=238203  

தேவையானவை: பாசிப்பருப்பு – அரை கப், தண்ணீர் -ஒரு கப், சர்க்கரை – ஒரு கப், நெய் – அரை கப், கோதுமை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய் – 2, கேசரி பவுடர் – சிறிதளவு, முந்திரி – 10.

செய்முறை: பாசிப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து 5 விசில்

வரும்வரை குக்கரில் வேவைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும். முந்திரியை நெய்யில் வறுத்துக்கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் சேர்த்துச் சூடானதும் கோதுமை மாவு சேர்த்து லேசாக வறுத்துக்கொள்ளவும். அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து அதில் அரைத்த பாசிப்பருப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். பிறகு நெய் சேர்த்து கலவை சுருண்டு வரும்வரை கிளறவும். இத்துடன் கேசரி பவுடர், பொடித்த ஏலக்காய், கோதுமை மாவு சேர்த்து அல்வா பதம் வந்ததும் முந்திரி சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

 

]]>
https://tamilyugam.in/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be/feed/ 0
வத்தக் குழம்பு செய்வது எப்படி..?? https://tamilyugam.in/%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e/ https://tamilyugam.in/%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e/#respond Sat, 30 May 2026 08:45:30 +0000 https://tamilyugam.in/?p=238187  

தேவையான பொருட்கள்:

புளி – ஒரு கைப்பிடி அளவு
சின்ன வெங்கயம் – 10
பூண்டு – 10
சுண்டைக்காய் வத்தல் – ஒரு கைப்பிடி அளவு
மணத்தக்காளி வத்தல் – ஒரு கைப்பிடி அளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி – சிறிது
கடுகு – சிறிதளவு
உளுந்தம் பருப்பு – சிறிது

வறுத்து அரைக்க:

காய்ந்த மிளகாய் – 5 அல்லது 6
மல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
வெந்தயம் – 10 எண்ணம்

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மல்லி விதை,துவரம் பருப்பு, மிளகு, கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம் , காய்ந்த மிளகாய் இவை அனைத்தையும் நன்கு சிவக்க(பிரவுன்) வறுக்க வேண்டும்.

வறுத்த பொருட்கள் ஆறிய பிறகு 3 அல்லது 4 சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு மைய (மசிய) அரைத்து கொள்ளவும்.

வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சுண்டக்காய் வத்தல்,மணத்தக்காளி வத்தல் இவற்றை தனித் தனியாக வறுத்து பின்பு வாணலியில் இருந்து எடுத்து தனியாக எடுத்து விடவும்.

அதே எண்ணெய்யில் கடுகு, உளுந்து தாளிக்கவும். பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதனுடன் புளி, உப்பு சேர்த்து கரைத்து வடிகட்டி வதங்கிய பூண்டு,வெங்காயத்துடன் சேர்த்து விடவும். மஞ்சள் பொடி சேர்க்கவும். இதனுடன் அரைத்த விழுது சேர்க்கவும். கொதிக்கும் போது வறுத்து வைத்த வத்தல் வகைகளை சேர்க்கவும். கொதிக்கும் பொழுது 2 டேபிள் ஸ்பூன் நல்ல எண்ணெய் விடவும். நன்கு வற்றிய பிறகு இறக்கவும்.

 

]]>
https://tamilyugam.in/%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e/feed/ 0