Driving Licence தொலைஞ்சுடுச்சா? கவலைய விடுங்க..!! இப்படி அப்ளை பண்ணுங்க..!!

ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால் எப்படி ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிப்பது குறித்த முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமம்:

இந்திய சட்டத்தின் படி 18 வயதிற்கு மேற்பட்ட வாகனம் ஓட்ட தெரிந்தவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிடும் பட்சத்தில் புதிய ஓட்டுநர் உரிமம் பெறாமலே வாகனங்களை இயக்கினால் கடும் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த புதிய வாகன ஓட்டுநர் உரிமத்திற்காக அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. தற்போது எப்படி ஆன்லைன் மூலமாகவே புதிய ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்.

முதலில், https://parivahan.gov.in என்கிற இணையதள பக்கத்திற்கு சென்று ONLINE SERVICES என்பதை கிளிக் செய்து DRIVING LICENCE RELATED SERVICES என்கிற ஆப்சனுக்குள் நுழையவும். பின்னர், தமிழ்நாடு என்கிற மாநிலத்தைத் தேர்வு செய்து DRIVING LICENCE என்கிற பக்கத்திற்குச் செல்லவும். பின்னர், SERVICES ON DL (புதுப்பித்தல்/ நகல்/ AEDL/ IDB/மற்றவை) இவற்றில் ஒன்றை தேர்வு செய்து CONTINUE கொடுக்கவும். பின்னர், ஓட்டுநர் உரிமத்தின் எண், பிறந்தநாள் தேதி ஆகியவற்றை பதிவு செய்து Continue கொடுக்கவும். பின்னர், ISSUE OF DUPLICATE DL என்பதை கிளிக் செய்து ஓட்டுனர் உரிமம் தொலைந்த விளக்கத்தை அளிக்க வேண்டும். பின்னர், விண்ணப்பப் படிவத்திற்கான பணத்தை செலுத்தி அதற்கான ரசீதையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

Read Previous

சட்டத்தை செயலிழக்கவோ, முடக்கி வைக்கவோ ஆளுநருக்கு அதிகாரமில்லை..!!உச்சநீதிமன்றம்..!!

Read Next

ஜி20 தலைமை பொறுப்பை ஏற்கும் பிரேசில்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular