இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய ஆடவர் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இங்கிலாந்து அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் மூலம் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் மிட்செல் ஸ்டார்க் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதாவது ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் (28 ரன்கள்) அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த ஆஸ்திரேலியா வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார். மோசமான சாதனை படைத்த ஸ்டார்க் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.




