அதிக அளவிலான மக்கள் தங்கள் முதலீடுகளுக்கு பாதுகாப்பை மட்டுமே பிரதானமாக நினைக்கின்றனர். சிலர் அதிக வட்டியை எதிர்பார்க்கின்றனர். நிலையான வைப்பு நிதி கணக்கில் ஒவ்வொரு வங்கியும் குறிப்பிட்ட அளவிலான வட்டியை நிர்ணயிக்கிறது. வங்கிகள் தங்களது திட்டங்களுக்கான கால அளவு முதல் சில வரைமுறைகளையும் வகுத்துள்ளனர். இவற்றில் மக்களுக்கு எவை வசதியாக உள்ளதோ அவற்றை தேர்வு செய்து கொள்ளலாம். பங்குச் சந்தைகள் மற்றும் mutual funds திட்டங்களில் முதலீடு செய்வது பிரபலமடைந்து வரும் போதிலும், நிலையான வைப்புத் திட்டம்(FD) மக்களுக்கு பாதுகாப்பானதாக இருந்து வருகிறது. வீட்டில் உள்ள உள்ள பெண்கள் பெயரில் Fixed Deposit செய்வதில் பல்வேறு நன்மைகள் உள்ளது.
பொதுவாக, பெரும்பாலான பெண்கள் அல்லது இல்லத்தரசிகள் குறைந்த வருமான வரி வரம்பிற்குள் வருவார்கள். இல்லத்தரசிகள் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவர் தனது மனைவி பெயரில் எஃப்டி செய்தால் டிடிஎஸ் மட்டுமின்றி, கூடுதல் வரியையும் தவிர்க்கலாம். சுருக்கமாக சொன்னால், சொந்த பெயருக்கு பதிலாக மனைவியின் பெயரில் FD செய்வதன் மூலம் பல நன்மையைப் பெற முடியும். நிதியாண்டில் எஃப்டியில் இருந்து பெறப்பட்ட வட்டி ரூ.40,000க்கு மேல் இருந்தால், 10 சதவீதம் டிடிஎஸ் செலுத்த வேண்டும். இந்நிலையில், மனைவியின் வருமானம் குறைவாக இருப்பின், படிவம் 15G-ஐ தாக்கல் செய்வதன் மூலம் TDS செலுத்துவதை தவிர்க்கலாம்.




