கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிர்ந்து வரும் ஒரு ஸ்டைல் தான் ஜிபிலி ஸ்டைல். இதை சாமானிய மக்களிலிருந்து பெரும் பெரும் நட்சத்திரங்கள் முதற்கொண்டு பகிர்ந்து வருகின்றனர். பலர் இதை வைத்து வீடியோ முதற்கொண்டு எடுத்து வருகின்றனர்.
இது கடந்த ஒரு வார காலமாகத் தான் புழக்கத்தில் உள்ளது. இது பல பிரச்சனைகளை சமீபத்தில் சந்தித்தாலும் மக்கள் இப்படி செய்வதை விரும்பி அதைக் கண்டு கொள்வதில்லை. ஆனால் இப்பொழுது சைபர் கிரைம் போலீசார் நம்மை எச்சரித்துள்ளனர்.
ட்ரெண்டிங் ஆக வேண்டும் என்று ஆசைப்படும் மக்கள் இப்படி செய்து தனது போட்டோவையும் பிறந்தநாள் தகவல்களையும் open AI யில் பகிர்ந்து வருகின்றனர். இதை நம் அனுமதி இன்றி தவறாக பயன்படுத்த பல வாய்ப்புகள் இருக்கின்றது. இதனால் மக்களை மிக கவனத்துடன் இருக்க சைபர் கிரைம் போலீசார் பரிந்துரைக்கின்றனர்.




