தனியார் துறை காப்பீட்டு நிறுவனமான HDFC Life மீது பல்வேறு விதிமுறைகளை மீறியதற்காக IRDAI அபராதம் விதித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பல முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் பாலிசிதாரர்களின் நலன்களைப் பாதுகாப்பது தொடர்பான பிரச்சனைகளுக்கு ரூ.1 கோடியும், அவுட்சோர்சிங் சேவைகள் தொடர்பான முறைகேடுகளுக்கு ரூ.1 கோடியும் என மொத்தம் 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.