I.N.D.I.A கூட்டணி கூட்டம் தள்ளிவைப்பு..!!

நாளை நடைபெறவிருந்த I.N.D.I.A கூட்டணியின் ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து, I.N.D.I.A கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நாளை (டிச.6) நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, நாளை நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read Previous

இன்று கடல் மீது பழிபோடுகிறது ஆளும் அரசு – டி.ஜெயக்குமார்..!!

Read Next

ஆந்திராவையும் புரட்டி போட்ட ‘ மிக்ஜாம் ‘..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular