
Institute of Banking Personnel Selection (IBPS) ஆனது பல்வேறு பணியிடங்களுக்கான கிளெர்க் தேர்வு அறிவிப்பை, இன்று வெளியிட்டுள்ளனர். அதன்படி வரும் 2024 ஆகஸ்ட் மாதம் முதல் நிலை தேர்வு நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பின்படி, இப்பணிக்கென மொத்தம் 6128 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன, அதில் தமிழகத்தில் மட்டும் 665 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன்படி இந்த ஆண்டு அதிகப்படியான காலிப்பணியிடங்கள் இருப்பதால் அதிகமான தேர்வர்கள் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களை அறிய https:www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.
மேலும் விவரங்களுக்கு:
https://www.ibps.in/wp-content/uploads/CRP_Clerks_XIV_Final_Notification_28.6.24.pdf