நாடு முழுவதும் உள்ள 11 பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 6,128 கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது. இதற்காக, 2025-26 ஆம் ஆண்டிற்கான பொதுவான ஆட்சேர்ப்பு செயல்முறை நடத்தப்படும். விண்ணப்ப செயல்முறை ஏற்கனவே தொடங்கிவிட்டது. விண்ணப்பங்கள் இம்மாதம் 21ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் மாதத்திலும், முதன்மைத் தேர்வு அக்டோபரிலும் நடைபெறும்.