பார்டர் கவாஸ்கர் டிராபியில், இதுவரை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ளது. இதில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வைக்கிறது. இதை தொடர்ந்து 5 வது மற்றும் கடைசி போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜனவரி 3) முதல் நடக்கிறது. இந்நிலையில் இந்த மைதானத்தின் வானிலை முன்னறிவிப்பின்படி ஆட்டத்தின் போது மழை குறுக்கிடாது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது ஆட்டத்தின் முதல் இரு நாட்களில் மிதமான வெப்பநிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4வது மற்றும் 5வது நாளில், சராசரி வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால், இந்த நாட்களில் ஈரப்பதம் 25 முதல் 30 % வரையில் இருக்கும் என்பதால், மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி 20% மழை பொழிவுக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.