IND vs AUS T20 தொடர்: 3-வது வெற்றியை கைப்பற்றுமா இந்தியா?.. இன்று இரவு பலப்பரிட்சை..!!

மூன்றாவது T20 தொடரில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணி 3வது வெற்றியை பெறுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

IND vs AUS T20:

உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் மோதி வருகிறது. ஏற்கனவே, முதல் t20 போட்டியில் இந்தியா அணி ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. இதன் பின்னர், இரண்டாவது t20 போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிலையில் இந்திய அணி மீண்டும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில், 2-0 என்கிற அளவில் புள்ளிபட்டியலில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இதனிடையே, இன்று இரவு மூன்றாவது t20 போட்டி நடைபெற இருக்கும் நிலையில் மீண்டும் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணி 3வது வெற்றியை அடையுமா என ரசிகர்கள் கடும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Read Previous

KVB கரூர் வைஸ்யா வங்கியில் புதிய வேலை..!! டிகிரி தேர்ச்சி போதும்.. விண்ணப்பிக்கலாம் வாங்க..!!

Read Next

அந்த காரணத்தால் மனைவியைக் கொன்ற கணவன்..!! பெரும் பரபரப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular