
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (பிப்.,20) இந்திய அணி எதிர்கொண்ட தனது முதல் ஆட்டத்தில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சுப்மன் கில் சதம் அடித்து, இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். சுப்மன் கில் 101 ரன்களும், கே.எல். ராகுல் 41 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றனர். ரோஹித் 41 ரன்களும், கோலி 22 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 15, அக்சர் படேல் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர்.