தற்போது அனைவரின் கவனமும் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் பக்கம் திரும்பி உள்ளது. அதன்படி முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 27ம் தேதி கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த மைதானத்தின் வானிலை அறிக்கை குறித்து கீழே காணலாம்.
அதாவது ஆட்டத்தின் முதல் இரு நாட்களில் மிதமான வெப்பநிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து 3 வது மற்றும் 4வது நாளில், சராசரி வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால், இந்த நாட்களில் ஈரப்பதம் 20 முதல் 25 % வரையில் இருக்கும் என்பதால், மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். அதன்படி 50% மழை பொழிவுக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த வானிலை நிலவரத்தின் படி, இந்த ஆட்டத்தில் உறுதியாக பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




