2024 T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நாளை (ஜூன் 29) நடக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில் இந்த மைதானத்தின் வானிலை முன்னறிவிப்பின்படி போட்டியின் போது மழை குறுக்கிடாது என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது கென்சிங்டன் ஓவல் மைதானத்தில், அதிகபட்ச வெப்பநிலை 31 C மற்றும் குறைந்தபட்சம் 27 C என்று வானிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 24 கிமீ / 10 மைல் வேகத்தில் காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாள் முழுவதும் மழை அச்சுறுத்தல் இல்லை எனவும் தெரிகிறது. இதன் விளைவாக தடையற்ற போட்டியை எதிர்பார்க்கலாம்.