இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச கிரிக்கெட் அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (செப்.27) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று 5-ம் நாளாக ஆட்டம் நடைப்பெற்று வந்த நிலையில் வங்க தேசம் அணி இரண்டாவது இன்னிங்சில் 146 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி 95 ரன்கள் மட்டும் எடுத்தால் வெற்றி என்ற சந்தோஷத்தில் விளையாடவுள்ளது. தற்போது மதிய உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கும்.