IPL 2024 || டிச.19ம் தேதி ஏலம் OTT ல் ஒளிபரப்பு – இலவசமாக பார்க்கலாமா?..

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் ஐபிஎல் தொடருக்கான ஏலம் குறித்து புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2024:

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டிகள் 20 ஓவர்களை கொண்ட மிகவும் பரபரப்பான கிரிக்கெட் போட்டியாகும். கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் பேர் விரும்பி பார்க்கும் ஐபிஎல் போட்டிகள் ஆண்டு தோறும் BCCI மூலம் நடத்தப்பட்டு வருகிறது. 2024வது ஆண்டு நடக்கும் ஐபிஎல் 17வது சீசன் ஆகும். இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்ளும். 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 74 போட்டிகள் கொண்ட தொடரில் அணியின் உரிமையாளர்கள் தங்கள் அணிகளுக்கான வீரர்களை ஏலத்தின் மூலமாக தேர்வு செய்கிறார்கள். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு ஐ பி எல் போட்டிக்கான மினி ஏலம் டிசம்பர் 19ம் தேதி அன்று நடக்க உள்ளது. இதனை பார்வையாளர்கள் அனைவரும் ஜியோ சினிமா ஓடிடி தளத்தின் மூலமாக இலவசமாக பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

பரபரப்பு.. 24 ஆண்டுகளுக்குப் பிறகு கணவரின் இறுதி சடங்கிற்கு வந்த மனைவி..!! ரகளையில் முடிந்த துக்க நிகழ்வு..!!

Read Next

UIDAI ஆதார் துறையில் காத்திருக்கும் நிரந்தர பணி வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular