
ஐபிஎல் ஆரம்பித்து, சூடு பிடித்து வரும் நிலையில் நேற்று 7:30 மணியளவில் டெல்லி அணிக்கும் மும்பை அணிக்கும் டெல்லியில் போட்டி நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற டெல்லி, முதலில் பௌலிங் செய்வதாக முடிவெடுத்தது.
முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 205க்கு 5 விக்கெட்டுகளை விட்டு தனது பேட்டிங்கை முடித்தது. இதில், திலக் வர்மா 59 ரன்களும் ரிக்கெல்ட்டன் 41 ரங்களும் எடுத்து அசத்தினர். மற்ற வீரர்களும் அவருக்கு கய் கொடுத்து அசத்தினர். பௌலிங்கில் டெல்லி அணி சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதில் விப்ராஜ் நிகம் மற்றும் குலதீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
அடுத்து பேட்டிங் ஆட இறங்கிய டெல்லி அணி இதிலும் சுமாராக தான் விளையாடியது. கருண் நாயர் 89 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் தனது பங்களிப்பை பெரிதாக வழங்கவில்லை. இறுதியில் டெல்லியால் வெறும் 193 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.