IPL 2025ல் RCB அணி புதிய கேப்டன்: அடுத்த ஆண்டு 2025ல் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிக்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த தொடருக்கான மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த ஏலத்தில் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இப்பொழுது வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெறாத நிலையில், அடுத்த ஆண்டு வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சரியான பிளேயர்களை ஏலத்தில் டார்க்கெட் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகிறது. மேலும் ஆர்சிபி அணி 4 பிளேயர்களை ரீட்டெயின் செய்திருக்கிறது.
அதன்படி, விராட் கோலி (ரூ. 21 கோடி), ரஜத் படிதார் (ரூ. 11 கோடி), யாஷ் தயாள் (ரூ. 5 கோடி) ஆகியோரை ஆர்சிபி அணி தக்கவைத்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த அணியில் பெரிய பிளேயர்களை இறக்க திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக கே எல் ராகுல், ரிஷப் பந்த், வார்னர் உள்ளிட்டவர்களை டார்க்கெட் செய்ய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் IPL 2025ல் RCB அணிக்கு கேப்டனாக டேவிட் வார்னரை டார்க்கெட் செய்ய முடிவெடுத்துள்ளது. எனவே இவரை ஏலம் எடுத்து புதிய கேப்டனாக நியமிக்கவும் உள்ளது. மேலும் இது குறித்து விராட் கோலி உடன் அந்த அணி நிர்வாகம் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.