Just for Fun Only: ரூ.10,000 சம்பளம் கேட்கும் மனைவி..!!

Wife:- :ஏங்க எனக்கு வீட்டு வேலை பார்க்க மாச மாசம் சம்பளம் வேணும்..

 

Husband ்:::எவ்வளவு வேணும்?..

 

Wife:- 10000 ரூவா வேணும்..

 

Husband :- – இப்படி வந்து உக்காரு..இந்த கால்குலேட்டரை புடி..

 

Wife:- சொல்லுங்க..

 

Husband :- – ஊர்ல இருக்க உன் சொந்தக்காரனுக்கு எல்லாம் நீயே போன் பண்ணி பேசிறது இல்லாம உங்க அம்மா அப்பா போன் நெம்பர் முதல் கொண்டு உங்க வீட்டு DTH வரைக்கும் ரீசார்ஜ் பண்றீல்ல..அந்த வகைல ஒரு 2000 ரூவா போடு..

 

Wife:- போட்டேங்க..

 

Husband :- – உன் தம்பி வண்டிக்கு பெட்ரோல் போடவும்,உன் தங்கச்சி கை செலவுக்கும் எனக்கே தெரியாம என் பாக்கெட்ல ஆட்டையை போட்டு தர்றீல்ல.. அந்த வகைல ஒரு 1500 ரூவா போடு..

 

Wife:- ம்..போட்டேங்க..

 

Husband : – உடம்பு சரியில்லாம இருக்க உன் சொந்தக்காரன்,வர

 

ுஷக்கணக்கா இழுத்துட்டு கெடக்குற உன் தாத்தானுக்கு எல்லாம் ஆப்பிள்,ஆரஞ்சுனு கலர் கலரா அடிக்கடி வாங்கிட்டு போயி கொடுக்குறீல்ல..அந்த வகைல ஒரு 2000 ரூவா போடு..

 

Wife:- ம்ம்..போட்டேங்க..

 

Husband :- – உன் மொகர கட்டைக்கு பேஷியல் பண்றேன்,தலைக்கு கலரிங் அடிக்கிறேன்னு மாசம் ரெண்டு தடவை பியூட்டி பார்லர் போறீல்ல.. அந்த வகைல ஒரு 1500 ரூவா போடு..

 

Wife:- ம்ம்ம்..போட்டேங்க..

 

Husband : – நீ பார்க்கு,பீச்சு,சினிமானு சுத்தனும்கிறதுக்காக நம்ம பையனை உசுப்பி விட்டு வீக்கெண்ட் ஆனா என்னை கூட்டிட்டு போயி அங்க தண்டம் வெக்குறீல்ல..அந்த வகைல ஒரு 4000 ரூவா போடு..

 

Wife:- ம்ம்ம்ம்..போட்டேங்க..

 

Husband :- – எங்க அம்மா கூட உனக்கு சண்டை வர்றப்ப எல்லாம் உப்பையும்,காரத்தையும் அதிகமா போட்டு அவங்களை அப்பப்போ ஹாஸ்பிட்டல் அனுப்புறீல்ல.. அந்த வகைல ஒரு 1500 ரூவா போடு..

 

wife :- ம்ம்ம்ம்ம்..போட்டேங்க..

 

Husband : – பத்து பைசா பிராயஜனம் இல்லாத பிரச்சனைக்கு எல்லாம் தாம்தூம்னு குதிச்சு என்னை டென்ஷன் பண்ணி டாஸ்மாக் பக்கம் தலை தெறிக்க ஓட விடுறீல்ல.. அந்த வகைல ஒரு 2500 ரூவா போடு..

 

Wife:- ம்ம்ம்ம்ம்ம்..போட்டேங்க..

 

Husband : – மொத்தம் எவ்வளவு ஆச்சு?..

 

Wife:- 15000 ரூவா..

 

Husband :- நீ என்ன சம்பளம் எதிர்பார்த்த?..

 

wife:- 10000 ரூவா..

 

Husband :- – இப்போ அந்த மீதி 5000 ரூவாய கரெக்ட்டா 1 ந்தேதிலருந்து 5 ந்தேதிக்குள்ள உங்கொப்பன் வீட்டுலருந்து வாங்கிட்டு வந்து என்கிட்ட கொடுக்குற..

 

😂😂😂😜😜😜

Read Previous

ஆண்கள் இவற்றை எல்லாம் தவிர்த்தால் குடும்பத்திற்கு நல்லது..!!

Read Next

படித்ததில் பிடித்தது: தாம்பத்தியம் என்பது..!! ஆண்களுக்காக இந்த பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular