எல் ஐ சி ஆனது இன்டெக்ஸ் பிளஸ்’ என்ற பெயரில் தனிநபர் ஆயுள் காப்பீட்டு பாலிசி ஒன்றை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்டெக்ஸ் பிளஸ்:
சேமிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் விலையேற்றத்தின் காரணமாக சேமிப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இருப்பினும் மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அமலில் உள்ளன. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) ஆனது பல்வேறு பாலிசி திட்டங்கள் வழங்கி வருகிறது. அதனுடன் இன்டெக்ஸ் பிளஸ்’ என்ற பெயரில் தனிநபர் ஆயுள் காப்பீட்டு பாலிசி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் முழு பாலிசி காலத்தின் போது ஆயுள் காப்பீட்டுத் தொகையுடன் சேமிப்பையும் பெற்றுக்கொள்ள முடியும். அடிப்படை காப்பீட்டுத் தொகையை பொறுத்தவரை பாலிசிதாரர்களின் அதிகபட்ச வயதானது 56, 60 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதிர்ச்சியின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் (நிறைவு) மற்றும் முதிர்ச்சியின் அதிகபட்ச வயது 75 அல்லது 85 ஆண்டுகள். 90 நாட்கள் முதல் 50 வயது வரையிலான ஆண்டு பிரீமியத்தில் 7 முதல் 10 மடங்கு அடிப்படைத் தொகையும், 51 வயது முதல் 60 வயது வரையிலான ஆண்டு பிரீமியத்தில் 7 மடங்காகவும் இருக்கும். பாலிசி காலம் 10 முதல் 25 ஆண்டுகள் ஆகும்.