
உன் மீது நான் கொண்டுள்ள நேசங்களின் அளவினை நீ ஒருபொழுதும் அறிந்ததில்லை….
அறியப் போவதும் இல்லை….
நீ நினைப்பதை விடவும்
உன் பெயரில் நான் நிறையவே அன்பினை சேமித்து வைத்துள்ளேன்…
அவை ஒரு பொழுதும் குறைவதாக இல்லை….
மாறாக
அது இன்னுமின்னுமாய் நிரம்பி வழியக் காண்கிறேன்.
நீ எனக்குச் சொந்தமானவன் அன்று. சொந்தமாகப் போகின்றவனும் அன்று….
இருப்பினும் இந்தப் பந்தம் எனக்குப் பிடித்தமான ஒன்று…
ரஹ்மானின் இசை, வைரமுத்துவின் கவிதைகள், டாவின்சியின் ஓவியங்கள், பாட்டி சொல்லும் கதைகள்,
அடம்பிடித்து வாங்கும் புத்தகங்கள், கடற்கரையில் நான் தேடிப் பொறுக்கிச் சேர்க்கும் சிற்பிகள் போல என் பிடித்தங்களில் நீயும் ஒன்று….
உன் அணைப்புகளில் சரணடைவதில் எனது காத்திருப்பின் காயங்கள்
எல்லாம் காணாமல் போகக் காண்கிறேன்….
அந்த நொடியினை தினம்தினம்
கனாக் காண்கிறேன்….
உனது முத்தங்களால் நனைந்த கன்னங்களைக் கிள்ளிப் பார்க்கிறேன். அவை நிஜமல்லை கனாவென தெளிந்ததும் கொஞ்சம் துடிக்கின்றேன்…..
இந்த உறவிற்கும் உணர்விக்கும்
என்ன பெயர் என்று தெரியவில்லை….
அது வரையில் அது “காதலா”க இருக்கட்டும்….
எனக்குள்ளே அக் காதல் பத்திரமாய் உறங்கட்டும். 🫰🫰🫰🫰…
இனிய காதலர் தினம் நல்வாழ்த்துக்கள்..