Lunch Box-ல் துர்நாற்றம் வீசுகிறதா?.. மணம் வராமல் சுத்தம் செய்ய டிப்ஸ் இதோ..!!

பொதுவாக நிறைவான ஒரு மதிய உணவில் நாள் முழுவதும் உடலுக்கு ஆற்றலை வழங்கும் ஊட்டச்சத்துக்கள் இருக்க வேண்டும்.

இதனை சிலர் வேலை அல்லது பள்ளிக்கு செல்லும் போதும் சாப்பாடு பெட்டியில் அடைத்து எடுத்து செல்வார்கள். மதிய உணவுடன் நம்முடைய விறுப்பு, வெறுப்புகளையும் எடுத்து செல்கிறோம். அதே சமயம் குடிக்க தேவையான தண்ணீரும் அவசியமானது.

வீட்டை விட்டு வெளியே சென்றால் எப்போதும் சொந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வது நல்லது.

இப்படி வெளியில் எடுத்து செல்லும் தண்ணீர் போத்தல், சாப்பாடு பெட்டி மீண்டும் வீட்டிற்குள் வரும் போது ஒரு வகையான மணத்தை வெளியேற்றும்.

இதனை சாதாரணமாக கழுவினால் துர்நாற்றம் போகாது. சில வழிமுறைகளை பின்பற்றினால் இலகுவாக துர்நாற்றம், எண்ணெய்த்தன்மை நீக்கலாம்.

அந்த வகையில், சாப்பாடு பெட்டியின் துர்நாற்றத்தை போக்க உதவும் சில எளிய வழிமுறைகள் பற்றி தொடர்ந்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மணம் வராமல் சுத்தம் செய்வது எப்படி?

1. கழுவிய பின் பாட்டில், லஞ்ச் பாக்ஸ்களை திறந்தப்படி வைக்க வேண்டும். அப்போது அதிலிருந்து வரும் துர்நாற்றம் முற்றாக சென்று விடும்.

2. ஒரு குறிப்பிட்ட இடத்தில் தலைகீழாக கவிழ்த்து வைக்க வேண்டும். அப்படி செய்தால் அதிலுள்ள நீர் வெளியே பாக்ரீயாக்களின் தாக்கத்தை குறைக்கும். இதனை வழக்கமாக்கிக் கொண்டால் சிறந்தது.

3. ஒயிட் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் துர்நாற்றத்தை உருவாக்க கூடிய பாக்டீரியாவை இல்லாமலாக்கும். இதனால் துர்நாற்றம் வருவது குறையும். இதன்படி, பருத்தி துணி அல்லது பேப்பர் டவலை வினிகர் கலந்த தண்ணீரில் நனைத்து, லஞ்ச் பாக்ஸுக்குள் சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். பின்னர் திறந்தப்படி வைத்திருந்தால் துர்நாற்றம் இல்லாமல் போகும்.

4. துர்நாற்றம் வரும் லஞ்ச் பாக்ஸை உப்பு சேர்க்கப்பட்ட உருளைக்கிழக்கு துண்டுகளை பயன்படுத்தி அழுத்தி தேய்க்க வேண்டும். சரியாக 15-20 நிமிடங்களுக்கு பின்னர் லஞ்ச் பாக்ஸை தண்ணீரால் சுத்தம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

5. சமையலுக்கு பயன்படுத்திய எலுமிச்சம்பழ தோலை தண்ணீருடன் போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை டிபன் பாக்ஸில் ஊற்றி அரை மணி நேரத்திற்கு பின்னர் சுத்தம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் டிபன் பாக்ஸை சுத்தமாகும்.

Read Previous

ரமலான் பண்டிகை 2025.. ரமலான் நோன்பு தொடங்கும் தேதி அறிவிப்பு..!!

Read Next

மனைவியின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் கணவன்.. உண்மையான ஆண்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular