Lungs Detox Foods | நுரையீரலை சுத்தப்படுத்தும் 5 முக்கிய உணவுகள்..!!

நம் உடலின் மிக முக்கியமான உறுப்பு நுரையீரல், வைரஸ் பக்டீரியா தொற்றால் நுரையீரல் பாதிப்படைகிறது.

சுத்தமில்லாத காற்று, புகைப்பழக்கம், ஆரோக்கியமற்ற உணவுமுறைப்பழக்கத்தால் நுரையீரல் சேதமடைகிறது.

உணவு நீர் எவ்வளவோ முக்கியமோ அதைப்போன்று தான் மூச்சுக்காற்றும்.

தொடர் இருமல், சளித்தொந்தரவு, மூச்சுத்திணறல், மூச்சிரைப்பு என்பன நுரையீரல் பாதிப்படைந்திருப்பதை காட்டும் அறிகுறிகள் ஆகும்.

இந்த பதிவில் நுரையீரலை சுத்தப்படுத்தும் உணவுகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

வெல்லம்:

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு மாற்றானது வெல்லம், ஆரோக்கியமான அதே சமயம் உடலுக்கு தேவையான விட்டமின்கள், மினரல்கள் வெல்லத்தில் உண்டு. இது உட்கொண்டால் நுரையீரலில் சேரும் நிக்கோட்டின், பிற நச்சுக்கள் மற்றும் அழுக்குகளை வெளியேற்றுகிறது.

சிட்ரஸ் பழங்கள்:

ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற விட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்களில் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்திருக்கின்றன. இவை உடலில் உள்ள செல்கள் சேதம் அடையாமல் தடுப்பதுடன் நாள்பட்ட நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கும், இவற்றை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் நுரையீரலின் நச்சுக்களை நீக்குவதோடு அதில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கிறது.

மாதுளை

இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று வகை சுவைகளும் தன்னுள் கொண்டுள்ள மாதுளையை தொடர்ந்து சாப்பிட்டால் பலவகையான நன்மைகளை அள்ளிக்கொடுக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதுடன் நுரையீரலின் நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமாக வைக்கிறது.

இஞ்சி:

சுமார் 5000 ஆண்டுகளாக சமையலில் பயன்படுத்தப்பட்டும் வரும் இஞ்சி மிக முக்கியமான மருத்துவ பொருளாகும், செரிமானத்தை சீராக்கி வயிறு தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது, இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் நுரையீரலை பாதுகாக்கிறது.

மஞ்சள்:

உலகெங்கிலும் மருத்துவ உலகில் மிக முக்கிய இடம்பிடிப்பது மஞ்சளே, அநேகமான நோய்களுக்கு மருந்தாகும் மஞ்சளின் மகத்துவத்துக்கு அதில் இருக்கும் குர்குமின் என்ற பொருளே காரணம், இதுவே நுரையீரலில் ஏற்படும் அழற்சியை தடுத்து திசுக்களை பாதுகாக்கிறது.

Read Previous

அறிந்து கொள்ளுங்கள் சிவபெருமானுக்கு உரிய முக்கிய விரதங்களை..!!

Read Next

ஒரு நாளில் எத்தனை முறை உ றவு கொண்டால், உடனே கருத்தரிக்க முடியும்?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular