மாதம் 2 லட்சம் பாக்கெட்டுகள் விற்பனையாகும் நயன்தாரா நிறுவன தயாரிப்பு பெமி 9 நாப்கின்..!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற ஒரு நடிகையாக மட்டுமின்றி சமீபமாக பிஸினஸ்சிலும் இறங்கி இருக்கிறார் நயன்தாரா. ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கும் நயன்தாரா, சொந்தமாக விமானம் வைத்திருக்கிறார். கணவர் விக்னேஷ்குமாருடன் வெளிநாடுகளுக்கு சென்றால் அவரது சொந்த விமானத்தில் தான் பறக்கிறார், பெமி 9 என்ற அழகு சாதன பொருட்கள், பெண்கள் உபயோக தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நயன்தாரா தற்போது பெமி 9 என்ற பெண்களுக்கான நாப்கின் விற்பனையை துவக்கியுள்ளார். ஈரோட்டை சேர்ந்த கோமதி என்ற பெண்மணியும், நயன்தாராவும் இணைந்து இந்த பெமி 9 நாப்கின் விற்பனையை துவக்கியுள்ளனர்.

இதுகுறித்து கோமதி கூறியதாவது, நான் கடந்த 25 ஆண்டுகளாக தொழில் உலகத்தில் இருந்து வருகிறேன், 15 ஆண்டுகளாக நாப்கின் விற்பனையை செய்து வருகிறேன். இதைபற்றி பேசவும், பெண்களுக்கான ரகசியம் போலவும் பலர் இதை நினைக்கின்றனர். இதில் தாழ்வு மனப்பான்மையே தேவை இல்லை. பீரியட்ஸ் பிரச்னைகள் என்பது பெண்கள் அனைவரும் சந்திக்கும் பிரச்னைகளில் மிக முக்கியமானது. அதனால் கடந்த 15 ஆண்டுகளாக தரமான நாப்கின்களை விற்பனை செய்கிறோம். இதையறிந்த நயன்தாரா, அந்த வகை நாப்கின்களை அவரது பெமி 9 நிறுவனம் மூலம் வர்த்தகம் செய்ய இணைந்தார். இது ஜெர்மனி தொழில்நுட்பத்தில் 5 வகையான டெக்னாலஜியை கொண்டிருக்கிறது. மற்ற நாப்கின்களை போல இது இருக்காது. பெண்களுக்கு இந்த நாப்கின்களை பயன்படுத்தும்போது பீரியட்ஸ் குறித்த உணர்வே இருக்காது.

ஏறக்குறைய இந்த புராடெக்டை ஓராண்டுக்கு மேல் பயன்படுத்தி பார்த்த பிறகுதான், நயன்தாரா இதை அவரது தயாரிப்பில் வர்த்தகம் செய்ய சம்மதம் தெரிவித்து இணைந்தார். அதற்கு காரணம் அதன் தரம்தான். கடந்த மாதத்தில் மட்டும் 2 லட்சம் நாப்கின் பாக்கெட்டுகள் விற்றுள்ளது. இன்னும் கடைகள், மெடிக்கல் ஷாப் போல அனைத்து இடங்களுக்கும் இது விற்பனைக்கு வரவில்லை. தெரிந்தவர்கள், வாங்கி பயனடைந்து மற்றவர்களுக்கு ரெக்மெண்ட் செய்து வாங்க சொன்னவர்கள் மூலமாகவே, இதன் விற்பனை இதுவரை நடந்துவருகிறது.

விரைவில் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் என பெண்கள் அதிகமுள்ள பகுதிகளில் இதுபற்றி செய்முறை விளக்கம் காட்டி விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். பேண்டீன் லைனர் என்பதில் டயாக்ஸின் குளோரின் உள்ளது. இப்போதெல்லாம் பொதுக்கழிப்பிடத்தை பயன்படுத்தினால் பலவிதமான தொற்றுகள் ஏற்படுகிறது. அதனால் பேண்டீன் லைனரை பெண்கள் மட்டுமின்றி ஆண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என அனைவருமே பயன்படுத்தலாம், என்று கோமதி அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

Read Previous

UIDAI ஆதார் துறையில் காத்திருக்கும் நிரந்தர பணி வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!!

Read Next

புதிய வகை கொரோனா பரவல்.. சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular