
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை கூடவுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க, தேனி எம்.பி., ஓ.பி.ரவீந்திரநாத்-க்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இன்று அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், மேல்முறையீட்டுக்காக தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியாவில் பாஜக அரசின் பதவிகாலம் நிறைவடைய இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், நேற்று டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தை பாஜக கூட்டியது குறிப்பிடத்தக்கது.