OCD எனப்படுவது தன்னை சுற்றியுள்ள பொருட்களின் நுணுக்கங்களை பராமரிக்க விரும்பும் ஒரு உளவியல் பிரச்சனையாகும். குறித்த இந்த பிரச்சனை உள்ளவர்கள் கடைபிடிக்கும் ஒரு சில விசித்திர பழக்கங்கள் பற்றி இங்கு காணலாம்..
இந்த பிரச்சனை உள்ளவர்களிடம் பேசுகையில் தான் கூறிய வார்த்தை வாக்கியத்தை அவர்கள் மீண்டும் மீண்டும் கூறி உறுதி செய்து கொள்வதை நாம் காணலாம். மேலும் இந்த பிரச்சனை உள்ளவர்கள் அடிப்படையில் இறை நம்பிக்கை அதிகம் கொண்டவர்களாக இருப்பது உண்டு இதன் காரணமாக இவர்கள் அடிக்கடி கண்களை மூடி மனதிற்குள் பிரார்த்தனை செய்வதும் உண்டு. ஓசிடி பிரச்சனை உள்ளவர்கள் பார்ப்பதற்கு அப்பாவி போல் தெரிந்தாலும் பாலியல் சார் விஷயங்களில் அதிகம் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள் குறிப்பாக விசித்திர உடலுறவு முறையில் அதிகம் செலுத்துபவர்கள் ஆவர். ஒரு விஷயத்தை சரியாக முடித்த பின்னரும் அதனை சரியாக தான் முடித்தோமா என மீண்டும் மீண்டும் பரிசோதனை செய்து கொள்வது இவர்களின் வழக்கமாக இருக்கும். அலமாரியில் பொருட்கள் முறையாக அடுக்கி வைக்கப்பட்டு இருப்பினும் மீண்டும் மீண்டும் அவற்றை அடுக்க முயற்சி செய்து பொருட்களை அடுக்கி வைத்த பின்னர் திருப்தி இல்லாமல் இருப்பது. தங்கள் நாளில் பெரும்பான்மை நேரத்தை சுத்தம் செய்வதிலேயே இவர்கள் கழிப்பது உண்டு. அதாவது 37% நேரத்தை இவர்கள் சுத்தம் செய்திலேயே கழிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. இயல்பானவர்களை காட்டிலும் இந்த ஓசிடி பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் கண்களை படபடவென அடித்துக் கொள்வதை நாம் பார்க்க முடியும் குறிப்பிட்டு ஒரு விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்துவதன் காரணமாக இவ்வாறு செய்கின்றனர். எதிலும் முழுமையை விரும்பும் ஓசிடி நண்பர்கள் தங்கள் தோல்விகளை எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளும் நேரம் துவண்டு போகும் பண்பு கொண்டவர்கள்..!!