4 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் விளையாட்டுத் தொடர் தான் ஒலிம்பிக். 33 வது முறையாக இத்தொடர் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கடந்த ஜூலை 26ம் தேதி முதல் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்நிலையில் கடந்த 16 நாட்களாக நடைபெற்று வந்த விளையாட்டுப் போட்டிகள் நேற்றுடன் (ஆகஸ்ட் 11) நிறைவடைந்தது.
இந்த நிலையில் ஒலிம்பிக் பதக்க பட்டியலை பொறுத்தவரை அமெரிக்கா 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் வென்று மொத்தம் 126 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. சீனா (40 தங்கம். 27 வெள்ளி, 24 வெண்கலம், மொத்தம் 91 பதக்கங்கள்) 2-வது இடத்தையும், ஜப்பான் (20 தங்கம், 12 வெள்ளி. 13 வெண்கலம், மொத்தம் 45 பதக்கங்கள்) 3-வது இடத்தையும் பிடித்தன. இந்தியாவை பொறுத்தவரை 0 தங்கம், ஒரு வெள்ளி. 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களைக் கைப்பற்றி 71-வது இடத்தைப் பிடித்தது.