சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26ம் தேதி முதல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் பங்கேற்றார். அதில் கியூகா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். தற்போது வினேஷ் போகத் தொடர்பான அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத், சுமார் கூடுதலாக 100 கிராம் எடை இருப்பதாகக் கூறி திடீர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து இறுதி போட்டிக்கு முன்னேறிய அமெரிக்க வீராங்கனைக்கு தங்கம் பதக்கம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.