PM கிசான் திட்டத்தில் கணக்கு வச்சுருக்கீங்களா?.. மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க..!!

PM கிசான் திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் கடந்த முறைக்கு KYC செய்தது போல இந்த முறை e-KYC மற்றும் நிலப் பதிவுகள் சரிபார்ப்பு செய்யப்பட வேண்டியது கட்டாயமானதாகும்.

பிரதமரின் வேளாண் நிதியுதவி திட்டம்:

இந்தியாவில் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி புதிய திட்டமான பிஎம் கிசான் திட்டம் கடந்த 2019ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. மத்திய அரசின் பிரதமரின் இந்த திட்டத்தில் நாடு முழுவதும் சொந்த நிலம் வைத்துள்ள விவசாய குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குவதற்கான செயலில் இருந்து வருகிறது. மேலும் வேளாண் மற்றும் அது சார்ந்த பணிகளுக்கான செலவுகளை செய்து கொள்ள இந்த பணம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் அடுத்த தவணையானது ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் மத்திய அரசால் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி வந்தது. தற்போது வரை அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகாதது குறிப்பிடத்தக்கது. கடந்த முறைக்கு KYC செய்தது போல இந்த முறை e-KYC மற்றும் நிலப் பதிவுகளை சரிபார்ப்பு செய்யப்பட வேண்டியது கட்டாயமானதாகும். e-KYC செய்ய விரும்புபவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் சென்று செய்து முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read Previous

நாவல் பழங்கள் சாப்பிட்ட மாணவர் பள்ளியில் உயிரிழப்பு..!! போலீசார் விசாரணை..!!

Read Next

டெல்டா மாவட்ட வாசிகளுக்கு அற்புதமான செய்தி..!! என்னப்பா சொல்றிங்க.. இவ்வளவு கோடியா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular