
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளில் அளிக்கப்படும் ரூபாய் 6000 பிஎம் கிசான் திட்டத்தின் தொகையானது மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு மூலம் விவசாயிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
PM கிசான் தொகை:
ஆண்டுக்கு மூன்று தவணைகளில் ரூபாய் 2000 வீதம் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு மத்திய அரசு நேரடியாக வழங்கி வருகிறது. விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு தேவையான விவசாய பொருட்களை மானிய விலையில் பெற்றுக் கொள்வதற்காக இந்த தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான தகுதிகள் மற்றும் விபரங்கள் அனைத்தும் மத்திய அமைச்சகத்தின் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாட்டின் பணவீக்கம் மற்றும் விலைவாசி அதிகரித்து வருவதால் பி எம் கிசான் திட்டத்தின் தொகையை அதிகரிக்க நாடு முழுவதும் பல்வேறு தரப்புகளிலிருந்தும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த கோரிக்கையை ஏற்று நடப்பு ஆண்டு இறுதிக்குள் தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேஷம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் மத்திய அரசு இதற்கு முன்னதாக PM கிசான் தொகையை 50 சதவீதம் அதாவது ரூபாய் 2,000 முதல் ரூபாய் 3,000 வரை உயர்த்தி அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.