
தற்போதைய கால கட்டத்தில் சேமிப்பின் முக்கியத்துவம் அறிந்து பலரும் சேமிக்க தொடங்கியுள்ளனர். வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்குவது போன்றே அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு திட்டங்கள் பல இயங்கி வருகிறது. சிறு சேமிப்பு திட்டம் முதல் முதிர்வு தொகையில் லாபத்தை வாரி வழங்கும் திட்டங்கள் பல அமலில் உள்ளது. இதில் வழங்கப்படும் திட்டங்களில் நல்ல லாபம் மற்றும் நல்ல வட்டி வழங்கப்பட்டு வருகிறது.
அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தின் கீழ் தனிநபராக 9 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். அதேபோல் கூட்டுக்கணக்காக 15 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். இத்திட்டத்தின் மூலம் 5 ஆண்டுகள் வரை மாதாந்திர வருமானம் பெற்றுக்கொள்ள முடியும். 5 லட்சம் ரூபாயும் 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. அதாவது ரூ.3,080 வட்டியாக வழங்கப்படுகிறது. சேமிக்க விரும்புபவர்களுக்கு இத்திட்டம் ஒரு நல்ல வாய்ப்பு.