
வட்டி விகிதம்:
இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றியமைத்து வருகிறது. அதன்படி கடந்த வருடம் மே மாதம் வட்டி விகிதம் 4.40% ஆக உயர்த்தப்பட்டது. அதன் பிறகு ஜூன் மாதம் 4.90 ஆகவும் ஆகஸ்ட் மாதத்தில் 5.40 ஆகவும் இறுதியாக கடந்த 2022 டிசம்பரில் மீண்டும் ரெப்போ வட்டி விகிதம் 35 புள்ளிகள் உயர்த்தப்பட்டு 6.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த வட்டி விகித உயர்வால் வங்கிகளில் வாகன கடன், வீட்டுக் கடன், நகை கடன் பெற்றோருக்கான மாதாந்திர EMI தொகை அதிகரித்து வருகிறது. மறுபுறம் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மற்ற வங்கிகளை தொடர்ந்து தற்போது தனியார் வங்கியான RBL சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 125 bps வரை உயர்த்தியுள்ளது.
அதன்படி, ரூ. 1 லட்சம் ரூபாய் வரையிலான இருப்பு தொகைக்கு 4. 25% வட்டி வழங்கப்படுகிறது. அதே போல ரூ.1 லட்சம் முதல் 10 லட்சத்திற்கு வரையிலான தொகைக்கு வட்டி விகிதம் 5.50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 10 முதல் 25 லட்சத்திற்கு 6 % நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் குறித்த விவரங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் ஜன. 25ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.