நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து 4வது அணியாக பிளே ஆஃபில் நுழைய சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நாளை (மே 18) கடும் போட்டி நிலவ உள்ளது. நாளைய போட்டியில் பெங்களூரு அணி தோல்வி அடைந்தால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும். பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 18.1 ஓவருக்குள் சேசிங் செய்து வெற்றிப் பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும்.