RSS பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவு..!!

தமிழகத்தின் 33 இடங்களில் RSS அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 22 மற்றும் 29ம் தேதிகளில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். மனு அளித்துள்ளது. இந்நிலையில், பேரணியால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் விண்ணப்பத்தில் போதிய தகவல்கள் குறிப்பிடவில்லை என காவல்துறை வாதம் வைத்துள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள நிபந்தனைகளை பின்பற்றி அணிவகுப்பு நடத்தலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சீருடை இல்லாமல் பேரணியில் யாரையும் அனுமதிக்கக்கூடாது என ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளது.

Read Previous

சிசோடியா ஜாமின் வழக்கு – உச்ச நீதிமன்றம் கேள்வி..!!

Read Next

மதுரை எய்ம்ஸ் – நீதிமன்றம் கேள்வி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular