SBI வங்கியின் அதிரடி நடவடிக்கை.. உயரும் EMI – அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வங்கியின் கடன் விகிதத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளது. இதன் காரணமாக வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் EMI தொகையை கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

உயரும் EMI:

SBI வங்கி நாடு முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் தனது கிளைகளைக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளை சிறப்பாக வழங்கி வருகிறது. பெரும்பான்மையான மக்கள் எஸ்பிஐ வங்கியில் தங்கள் கணக்குகளின் மூலமாக பலவிதமான கடன் திட்டங்களின் வாயிலாக பலனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தனது வங்கி நிதி செலவு அடிப்படையிலான கடன் விகிதத்தை ( MCLR) 10 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது. இதனால் கடன் வாங்கி உள்ள நபர்கள் தங்கள் இஎம்ஐ தொகையில் மாதம் தோறும் கூடுதலாக தொகையை செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

ஹவுசிங் லோன் போன்ற நீண்ட கால கடன்களுக்கான MCLR விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .எஸ்பிஐ உயர்த்தி உள்ள கட்டணங்கள் டிசம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் , இதன் வாயிலாக வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களின் இஎம்ஐ பணம் அதிகரிக்கும் என்று அறிக்கைகள் தெரிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கியை தொடர்ந்து மற்ற வங்கி நிறுவனங்களும் தங்களது வங்கி கடன் விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர்களுக்கான சம்பள உயர்வு – ஊழியர்கள் அதிருப்தி..!!

Read Next

வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.600க்கு விற்பனை – மத்திய அரசின் புதிய திட்டம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular