
எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியாகி இருந்தது. மேலாளர் மற்றும் துணை மேலாளர் பதவிகளுக்கு மொத்தம் 42 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் தான் கடைசி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்துவிடுங்கள்…
பணியிடங்கள் விவரம்:
* மேலாளர் (டேட்டா சயின்டிஸ்ட்) – 13 பணியிடங்கள்
* துணை மேலாளர் (டேட்டா சயிண்டிஸ்ட்) – 29 பணியிடங்கள் என மொத்தம் 42 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது…
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் பி.இ / பி.டெக், எம்.சி.ஏ, எம்.ஏ, எம்.எஸ்.சி போன்ற கல்வித்தகுதி உடையவராக இருக்க வேண்டும். டேட்டா சயின்ஸ் துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும். ஏ.ஐ / எம்.எல் மாடல் டெவலப்மண்ட் பிரிவிலும் அனுபவம் கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பினை படித்து தெரிந்துகொள்ளலாம்.
வயது வரம்பு:
* மேலாளர் (டேட்டா சயிண்டிஸ்ட்) பணிக்கு 26 முதல் 36 வயது உடையவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
* துணை மேலாளர் (டேடா சயிண்டிஸ்ட்) பணிக்கு 24-வயது முதல் 32 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு உண்டு..
சம்பளம் எவ்வளவு?:
* மேலாளர் (டேட்டா சயிண்டிஸ்ட்) – ரூ.85,920- 1,05,280
* துணை மேலாளர் (டேட்டா சயிண்டிஸ்ட்) கிரேடு ஸ்கேல் 2 – ரூ.64,820- 93,960
தேர்வு முறை: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்களை கொண்டு வெற்றி பெறும் தேர்வர்கள் அறிவிக்கப்படுவார்கள்…!!