SBI வாடிக்கையாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி – ஆட்டோ டெபிட் செய்யப்படும் பணம்..!!

எஸ்பிஐ கணக்கிலிருந்து தொகை முன்னறிவிப்பின்றி டெபிட் செய்யப்படுவது குறித்து வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியலை எழுந்துள்ளது.

SBI வங்கி:

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளுக்காக கணக்கிலிருந்து குறிப்பிட அளவு பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் மாத கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் அக்கவுண்டில் ரூபாய் 228 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. பின்னர் மொபைல் ஆப்பில்  விவரங்களை சோதனை செய்த பிறகு பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்திற்கு பணம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் இதற்கான ஒப்புதல் எதுவும் வங்கி கணக்கு உரிமையாளர்களிடமிருந்து பெறப்படவில்லை.

வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் இதுகுறித்து அதிர்ச்சியில் உள்ளனர். இதே போன்ற சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எஸ்பிஐ வங்கியில் நடத்துள்ளது. இத்திட்டத்திற்கு பணம் செலுத்துவது குறித்து எந்தவித ரசிதும், பாலிசி குறித்த விதிமுறைகள் நிபந்தனைகள் போன்ற எந்த விவரங்களும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி தெரிவிக்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக வங்கிக்கு அதிக அளவில் புகார்கள் எழுந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

பணியில் ஈடுபட்டிருந்த காவலர் விஷம் குடித்து தற்கொலை.!!

Read Next

மத்திய அரசு ஓய்வூதியதரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. 50 லட்சம் டிஜிட்டல் லைஃப் சான்றிதழ் – வெளியான அப்டே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular