இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் சூரிய ஒளி மின்சக்தி திட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் வீடுகளில் சூரிய மின்தகடு அமைப்பதற்கு 30,000 மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. உங்கள் வீடுகளில் ஒரு கிலோ வாட் சூரிய மின்தகடு அமைப்பதற்கு சுமார் 70 சதுர அடி இடம் மட்டுமே போதுமானது.
இதில் ஒரு நாளில் ஐந்து யூனிட்டுகள் வரை மின்சாரம் உற்பத்தியாகும். இதற்கான மின்சார உபகரணங்கள் நிறுவ மூலதன செலவு சுமார் 50 ஆயிரம் ரூபாய் ஆகும் நிலையில் அதில் 30 ஆயிரம் ரூபாய் அரசு மானியம் வழங்குகிறது. இந்தத் தொகை முடிவுற்ற ஏழு முதல் 30 நாட்களில் பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
சராசரியாக 600 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோர் சூரிய ஒளி மேற்கூரை மின் சக்தி ஒரு கிலோ வாட் மின்சார உபகரணம் நிறுவும் போது மின் கட்டணத்தை வெகுவாக குறைக்கலாம்.வீடுகளில் சூரிய மின் தகடு பொருத்தினால், சிறிய வீடுகளுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 900 ரூபாய் வரையிலும், பெரிய வீடுகள் என்றால் இரண்டாயிரம் முதல் 5 ஆயிரம் மிச்சமாகும்.
இந்த திட்டத்தில் இணைய Registration pmsuryaghar.gov.in, www.pmsuryaghar.gov.in, www.solorrooftop.gov.in போன்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9445854568, 9445854477, 9445854481 ஆகிய செல்போன் எண்களில் உதவி செயற்பொறியாளர்களை தொடர்பு கொண்டு கேட்கலாம் என தெரிவிக்கப்ட்டுள்ளது.