பொதுவாக அநேகமான வீடுகளில் காலையுணவாக இட்லி அல்லது தோசை எடுத்து கொள்வார்கள்.
இட்லிக்கு தொட்டுக் கொள்வதற்காக புளிப்பு, காரம் இரண்டையும் சரியாக கலந்த குழம்பு, சட்னி, சம்பல் இப்படியொரு காமினேஷனில் சாப்பிட பிடிக்கும்.
இந்த சந்தர்ப்பங்களில் கையேந்தி பவன் கெட்டி கார சட்னி செய்து சாப்பிடலாம். இட்லியுடன் இந்த சட்னியை சேர்த்து சாப்பிடும் பொழுது சுவை அல்டிமேட்டாக இருக்கும் என கூறப்படுகின்றது.
அந்த வகையில், கையேந்தி பவன் கெட்டி கார சட்னி எப்படி ஈஸியாக செய்வது என்பது குறித்து தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் – 6
* பூண்டு – 10 பல்
* பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)
* உப்பு – சுவைக்கேற்ப
* புளி – ஒரு துண்டு
* பெரிய தக்காளி – 2 (நறுக்கியது)
தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்:
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* பெருங்காயத் தூள் – சிறிது
சட்னி ரெசிபி:
வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு வரமிளகாய், பூண்டு போட்டு வதக்கவும். இவை வதங்கி வர வெங்காயத்தை சேர்க்கவும்.
வெங்காயம் பார்ப்பதற்கு பொன்னிறமாக மாறியதுடன் உப்பு மற்றும் புளி சேர்த்து கிளறி விடவும். பின்னர் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
இவையனைத்தும் வதங்கிய பின்னர் அடுப்பை அனைத்து சரியாக 10 நிமிடங்கள் கலவையை ஆற விடவும். ஆறிய கலவையை மிக்ஸி சாரில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
இறுதியாக கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் ஆகியவற்றை எண்ணெய் போட்டு தாளித்து சட்னியில் ஊற்றி கிளறினால் சுவையான “கையேந்தி பவன் கெட்டி கார சட்னி” தயார்.