
இந்தியன் ரயில்வே நிர்வாகம் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக நாடு முழுவதும் உள்ள 32428 காலி பணியிடங்களை நிரப்ப இருக்கிறது. இதில் தமிழ்நாட்டிற்கு உட்பட்ட தென்னக ரயில்வேயில் மட்டும் கிட்டத்தட்ட 2694 பணியிடங்கள் இருக்கிறது. இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போத https://www.rrbchennai.gov.in/என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டும்தான் விண்ணப்பிக்க முடியும். இதற்கான கல்வி தகுதி SSLC. இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு 18 முதல் 36-க்குள் இருக்க வேண்டும்.மேலும் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 18,000 முதல் சம்பளம் வழங்கப்படும் நிலையில் இதற்கான கடைசி தேதி பிப்ரவரி 22ஆம் தேதி ஆகும்.