
தற்போது நாளுக்கு நாள் பாஸ்ட்புட் கலாச்சார அதிகரித்து வரும் நிலையில் சொமேட்டோ மற்றும் ஸ்விக்கியின் பயன்படும் அதிகரித்து வருகிறது. இதில் படித்த ஏராளமான பட்டதாரிகள் பணிபுரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்கும் குறிக்கோளுடன் இந்திய அரசாங்கம் இ-ஷ்ரம் தளத்தை சமீபத்தில் தொடங்கியது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 மத்திய பட்ஜெட்டின் தனது உரையில், ஒரு கோடி ஜிக் ஒர்க்கர்ஸ் (Gig Workers) எளிமையாக பதிவு செய்யும் விதமாக இ-ஷ்ரம் (e-Shram) தளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பதிவு செய்யும் ஒவ்வொரு பணியாளருக்கும் மத்திய அரசு அடையாள அட்டைகளை வழங்கும் என்று தெரிவித்தார். அதன்படி பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) திட்டத்தின் கீழ் சொமேட்டோ, ஸ்விகி மற்றும் பிளிங்கிட் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தர வேலை இல்லாத ஊழியர்கள் இந்த சுகாதாரப் பாதுகாப்பு காப்பீடு பெற தகுதியானவர்கள் என கூறப்படுகிறது.